Friday, December 18, 2009

மழையும் நகரமும்

ஏனோ நம்ம சிட்டி மக்களுக்கு மழைனா ஒரு allergy , இருக்காதா பின்னே, ரோடின் ரெண்டு ஓரத்திலையும் தண்ணி, பாத சாரிகள் வண்டி ஓட்டுவோர் அனைவரும் அந்த median இல்லாதா ரோடின் நடுவே எறும்பு ஊர்வது போல ஒருவர் பின் ஒருவராக, மாட்டு வண்டியும் மாருதி காரும் ஒரே வேகத்தில் போக வைக்கும் .. மழை, The universal Leveller .

மக்களை சொல்லி குற்றம் இல்லை, ஏனோ நம் தெருக்கள் மழையே பெய்யாது என்ற ஒரு நம்பிக்கையில் கட்டப்பட்டவை போல, பெருவாரியான தெருக்களில் மழை நீர் தேங்கியே நிற்கும், மழை நீர் ஆட்டோமாடிக் ஆக சாக்கடையில் தான் பொய் சேர வேண்டும் என்பது அந்த மழை நீரின் விதி போலவும் தேங்கி நின்று போவோர் வருவோரின் டிரெஸ்ஸை வீணாக்குவது என்பது வானத்திலிருந்து கீழே விழுந்து மாண்டு போய் சாந்தி அடையாத அம்மழை நீரின் ஆவி (இது தான் நீராவியோ? ) பழி வாங்குவது போல தோன்றும்.. போகும், வரும் வாகனங்கள் டயர் வழியாக வண்டிகள் போகும் இடத்துக்கு மழை நீரை distribute செய்தே ஓரிடத்தில் இருக்கும் மழை நீரை போக்க வேண்டும. Here too மழை plays a big leveller

ஜோசியத்தில் நம்பிக்கை இல்லாதவர் கூட தட்ப வெட்ப நிலை கேட்பார், எனக்கு ஏனோ இது புரியாத புதிர், கூகிள் சர்ச், rippleys believe it or not மாதிரி எதாவது ஒன்றில் அப்படியே weather report உண்மையாக பலித்திருக்கிறதா என்று தேடிதான் பார்க்க வேண்டும். பாவம் பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகங்கள், ரொம்ப சமுதாய அக்கறையோடு ஸ்கூல் லீவு விடுவார். அன்று ஏனோ வருண பகவன் teka குடுத்து விட்டு நக்கலாக சிரிப்பார் இவர்களை பார்த்து .. பள்ளி குழந்தைகள் எதோ அவரவர் வசதிக்கு கில்லி, கோலி, பேப்பர் கப்பல், கிரிக்கெட், வீடியோ கேம்ஸ், creche என்று பல வேலைகளில் பிஸி ஆகி விடுவர். பசங்க ஸ்கூல் லீவ் என்று திரும்பி வீட்டுக்கு வந்து என்ன செய்கிறார்கள் என்று ஆபீஸ் ல் இருக்கும் parents மண்டை உடைத்து கொண்டிருப்பார்..

விக்ரமே பாடிவிட்டார், திருநெல்வேலி அல்வா டா.. சென்னையிலே என்னடா தண்ணி பஞ்சம் கூட இல்ல டா னு.. ஒரு ஐந்து வருஷங்களாக rain water harvesting கோயில் குளம் தூர் வாரல் போன்ற நடவடிக்கைகளால் சிட்டி யில் வாட்டர் டேபிள் கொஞ்சம் உயர்ந்து தண்ணீர் பஞ்சம் இல்லாவிட்டாலும் நம் மக்கள் அந்த மெட்ரோ வாட்டர் லாரி பின்னல் நீண்ட queue வை மறந்திருக்க மாட்டார்கள், ஆனாலும் ஏனோ மழை வந்தால் ஒரு எரிச்சல், கிரிக்கெட் ல் இந்திய வெற்றி பெற்றுக்கொண்டே இருந்தால் இருக்கும் ஒரு பீலிங்.. சே என்ன டா இவுங்க ஜெயச்சுகிட்டே இருக்காங்க,, அந்த மாதிரி மழை பெயஞ்சுட்டே இருக்கு என்ற ஒரு சந்தோஷம் கலந்த ஒரு அலுப்பு..

பசங்க ஸ்கூல் லீவு விடறது வேற matter நமக்கே ஆபீஸ் லீவ் விடுவாங்களா ? எதாவது நியூஸ் சேனல் ல இன்று சென்னையில் அனைத்து கம்பெனி களும் மழை காரணமாக மூடியே இருக்கும் என்று ஒரு G Oனு ஒரு நியூஸ் தேனாக காதில் வந்து பாய எவ்வளவு பேர் வெயிட் பண்ணியிருக்கீங்க, மாத்தி மாத்தி டிவி சேனலையும் ஜன்னல் வெளியே மழையும் பார்க்கும் அந்த காத்திருத்தல் சுகம், அடா அடா.. கடைசியில் இந்த பகல் கனவெல்லாம் பலிக்காது, பேசாம மழை நின்ற gap ல ஆபீஸ் கிளம்பறது தான் பெட்டெர் என்று ஒரு ஞான உதயம் வந்து, வண்டியை ஓங்கி ஒரு உதை விட்டு கிளம்பும் அந்த காலை வேளை.. எதோ லவர் காக காத்திருந்ததை பத்தி எல்லாம் ரொம்ப பேரு நிறைய ரௌசு விடுவாங்க,, இதை பார்க்கும்போது அதெல்லாம் ju ju pi

மழை வந்தால் ஒரே குடையில் ஜோடியாக போகலாம் என்கிற ஒரு hidden agenda நிறைவேறும் வாய்ப்பு வரும், உடனே உங்களுக்கு மரீனாவில் மதியம் ஒரு மணி வெய்யிலில் குடையில் இருக்கும் ஜோடி ஞாபகம் வந்தால் நான் பொறுப்பல்ல.. என்ன இருந்தாலும் மழையில் ஒரு குடையின் கீழ் இருக்கும் ஜோடி.. அந்தி மழைபொழிகிறது .. பாட்டெல்லாம் பாடிக்கொண்டே போகலாம், இதெல்லாம் பாவம் நம் மரினா பீச் வெய்யில் ஜோடிகளுக்கு சாத்தியம் இல்லை, நண்பர்கள் யாரேனும் வெய்யில் குடை டூயட் சாங் இருந்தால் தயவு செய்து தெரியபடுத்தவும், அது காதலோ என்ன கண்றாவியோ எதுவா இருந்தாலும் வாழ வைக்கலாம்..

மழை துளிகள் தொடரும்..

3 comments:

ரிஷபன் said...

வெய்யில்ல குடை புடிச்சுகிட்டு போனவங்களை பார்த்திருக்கேன்.. டூயட் பாடறது கஷ்டம்தான்.. எரிச்சல்ல எவ(ன்) டூயட் பாடுவா(ன்)? மழை பத்தி கவிதை எழுதினாலும் அதுக்கு அப்புறம் மாநகராட்சி புண்ணீயத்துல.. ரோட்டுல தேங்கற தண்ணி.. கொசு.. ஒரு கப்பு எல்லாம்.. அய்யோ சாமி ஆள வுடுன்னு புலம்ப வச்சிருது..

prashanth said...

Brilliant.....

people say, good writers are ones who write what they see and others are able to see through what they wrote

:)
Prashanth

me said...

Thanks Rishaban and prashanth..