Thursday, November 8, 2012

தீபாவளி advertisement



இது தீபாவளி, விளம்பரம், தீபாவளி-விளம்பரம், தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி போன்ற பல tag களின் ஒருமித்த சங்கமம்.

முன்னாடியெல்லாம் தீபாவளிக்கு ஐயன் பட்டாசுகள், standard   பட்டாசுகள்,அகர்வால் பவன் or ராமகிருஷ்ணா lunch home ஸ்வீட்ஸ் விளம்பரத்துக்கு யானை மேல் ஏறும் ஒரு jack spade மாதிரியான உருவம் ஸ்வீட்ஸ் ஐ கொடுக்கும். company மாறினாலும் 
ஸ்வீட்ஸ் மாரம இருக்கு, ஆனால் child labour காரணமோ pollution மற்றும் இதர பல காரணன்களுக்காக பட்டாசு பலரும் கொளுத்துவது  இல்லை. சிவகாசியில் வேறு அப்பப்போ விபத்துக்கள் நடந்து ஒரு நெகடிவ் sentiment create பண்ணி விடுகிறது. பழைய பேப்பர் விலை கூட தீபாவளி டைம் ல கூடுவது இல்லை னா  பாத்துக்குங்களேன்..இந்த நரகாசுரன்  uncle மேல எல்லாருக்கும் அப்படி என்ன கோபமோ தெரியல, பள்ளிகளில் கூட பட்டாசுகளுக்கு எதிராக சில விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் செய்கிறார்கள். தீபாவளியைக் கொண்டாட பட்டாசு வேண்டுமா வேண்டாமா என்பதில் தொடங்கி வெடிக்கும் பட்டாசா, night time display போன்ற பட்டாசா வரை ஒரு நீயா நானா வைக்கும் அளவுக்கு பேச matter  உள்ள topic. இதுல பாருங்க முன்னாடி எல்லாம் இந்த மாதிரி தலைபோற பூவா தலைய topic பத்தின செய்தி யா இருந்த எல்லாரும் சாலமன் பாப்பையா பட்டிமன்றம்  வெச்சு தீர்வ முடிவு பண்ணனும்னு  சொல்வாங்க. இப்போ அதுல கூட கோபிநாத் கு மாறிட்டாங்க. ஆனா ஒண்ணு அதுலயும் கிழவர் தீர்ப்பு சொல்ல மாட்டாரு, கோபிநாத்தும் தீர்ப்பை அறிவிக்கிரதுல நாட்டாமை இல்லை. In fact முன்ன தீபாவளி சிறப்பு பட்டிமன்றம் இருக்கும் இப்போ தீபாவளி சிறப்பு நீயா நானா..

வேற என்ன தான்
புதுசாக விற்கிறது தீபாவளி சமயத்தில்.. புடவையோ நகையோ sweets எல்லாம் எப்போதுமே இருந்தது தான்.
இப்போ புதுசாக வேஷ்டி விளம்பரம் வைக்கறாங்க டிவியில். சரத் குமார், மோகன்லால் மம்மூட்டி என்று பலரும். பிரகாஷ் ராஜ் கதக்களி  பெண்களுடன் எல்லாம் டான்ஸ் ஆடி வேஷ்டி விற்கிறார். இதுல நீயா நானா கோபிநாத் வேற. ஆனா எனக்கு என்னவோ ரொம்ப பிடிச்ச வேஷ்டி விளம்பரம், நம்ம மம்மூட்டி வருவது தான். வேஷ்டி கட்டியதால் புலி கூட நடந்து வரார், செஸ் விளையாடுகிறார். இன்னும் என்னன்னவோ தத்தா பித்தா என்று செய்கிறார். இதுல ஒரு பனியன் விளம்பரத்துக்கு சரத் குமார் தன சட்டையை கழட்டி heroinஐக்கபபாத்துவார்.. அது சட்டை விளம்பரமா இருந்தால் garnier  ஷாம்பூ ad  மாதிரி சட்டையின் வலிமையைப் பறைசாற்றி இருக்கும், பனியன் விளம்பரத்துக்கு எதுக்கு இதெல்லாம்.. நல்லவேளை சரத் குமார் நடிக்கும் வேஷ்டி விளம்பரத்துல இந்த சீன் வரலை.. இனி 2012ல் உலகம் அழியாது. என்னமோ advertisement காரர்களுக்கு வேஷ்டி மேல் ஒரு புது மோகம். தீபாவளிக்கு வேஷ்டி வாங்குகிறவர்கள் எவ்வளவு பேர்?, அதுலயும் இந்த விளம்பரங்களைப்பர்த்து வேஷ்டி வாங்கறது எவ்வளவு பேர்.. யாராவது MNC ல வேலை பார்க்கிற middle age ஆண்கள், தன நண்பர்களிடம் என் வேஷ்டி பார்த்தியா  இது தான் மம்முட்டி  புலி வளர்க்கும்  போது கட்டிக்கிட்ட வேஷ்டி என்று சொல்லுவார்களா? 






  
  

2 comments:

Pooja Gosh said...

Greetings
You like blogging or sharing with others and want to be a Blog Rockstar (or to inspire peer bloggers), then join us.
Get Published : liveonblogs[.]com
Whats in here For U ::: "I have a story to Tell" , "Blogger Awards" , "Inspire By Writing" , "Interviews"
I have a story to Tell : You will be featured on LiveONBlogs
Blogger Awards : You can nominate your loved bloggers
Inspire By Writing : Publish your thoughts or articles (even your contests and polls)
Interviews : You can interviews (we will Setup Company Email for you)
Cheers
Neha

Deepa Iyer said...

romba nondu poirke nu theriyardhu :)