Saturday, September 11, 2010

மொட்டை மாடி பருவம் - பாகம் 1

பல பேருக்கு தெரியுமா தெரியாதா எனக்குதேரில.. பள்ளி பருவம், கல்லுரி பருவம் போல மொட்டை மாடி பருவம் என்று ஒன்று உண்டு. ஸ்கூல் காலேஜ் முடிஞ்சா பொட்டிய கட்டிட்டு அடுத்தவேலய பாக்க போகணும் ஆனா இந்த மொட்டை மாடி பருவத்துக்கு அந்தமாதிரி no limitations .. இந்த மொட்டை மாடியனது வந்தாரை வாழவைக்கும் , காத்து வாங்க வைக்கும், தூங்க வைக்கும், வேடிக்கை பார்க்க வைக்கும், கிரிக்கெட் விளையாட வைக்கும் , இன்னும் என்னென்னெவோ செய்ய வைக்கும் ..

இந்த மொட்டை மாடி னாலே, ஞாபகத்துக்கு வரது இந்த நட்சத்ரங்கள என்றது, love -jodi love -jodi பாட்டு படறது, நிலா வைப்பாத்து சோறு ஊட்டறது இதெல்லாம் quite தேஞ்சு போன ரெகார்ட்ஸ்.. i டோன்ட் வான்ட் டு பிரேக் தோஸ் ரெகார்ட்ஸ்..

இந்த நட்சத்திரம் எண்ற ஜோலிக்கு நான் போனதே இல்ல, என்னா ஆரம்பத்திலேர்ந்தே கணக்குல நான் கொஞ்சம் இல்ல நிறையவே வீக், அது வேற டபுள் கவுன்டிங் ஆயிடுமோன்னு ஒரு பயம் வேற சோ அதா சாய்ஸ் ல வுடறது தான் பெட்டெர்.. இந்த மொட்ட மாடி பருவம் (MMP அப்டின்னு வெச்சுப்போம் செல்லமா...) ங்கறது எனக்கு ஒரு 8 வயசுலேந்து 25 வயசு வரை என்னை வளர்த்த பருவம். அதுக்கப்பறம் வளர்ந்த மாதிரி எனக்கு எள்ளளவும் doubte இல்ல .. ஏன் மொட்டை மாடி 25 வயசுக்கப்பறம் எங்கே போச்சு, யாராவது வடிவேலுவின் கிணற திருடினமாதிரி திருடிபோய் விட்டார்களா இதெல்லாம் நம்மை மெயின் ஸ்டோரி லேர்ந்து HIJACK பண்ணிவிடும் , as usual அதெல்லாம் freeya வுட்டுட்டுவோம்.

எங்க history miss சொல்லியிருக்காங்க side heading ஓட எழுதின தான் நல்ல மார்க் வரும்னு, better late than never , history miss historyஓட சேர்ந்தப்பரமாவது நாம அவங்க சொன்னதக்கேப்போமே..

1 . மொட்டை மாடியும் கிரிக்கெட்டும் - இது இரண்டு வகைப்படும்

a ) மொட்டை மாடியும் ரோடு கிரிக்கெட்டும் - அதாகப்பட்டது ரோட்ல கிரிக்கெட் விளையாடினால் பல கஷ்டங்கள், மத்தவங்க கஷ்டம் நம்ம கஷ்டமா மாறிடும், இல்ல தலைல வெச்சு கட்டிடுடுவாங்க - ரோடு ல போறவங்க வரவங்க மேல ball பட்டாக் குத்தம், பக்கத்துக்கு வீட்டு கண்ணாடி ஒடஞ்சா குத்தம், ball நாய் இருக்கற வீட்டுக்கு போன கஷ்டம், டென்னிஸ் ball அவங்க வீட்டுக்கு போனப்போ கத்தியால வெட்டின அந்த பாட்டிய மட்டும் கிரிக்கெட் விளையாடும் நல்லுலகத்திற்காக மன்னிக்கவே முடியாது .. அதெல்லாம் சரி மொட்டை மாடிக்கும் இதுக்கும் என்னா connection - tottadoin .. Here is the connection .. . அதாகப்பட்டது கண்ணாடி உடையறதும் பக்கத்துக்கு வீட்டுக்குள் ball பொய் விழறதும் பேச்சு பேச்சா இருக்காது, நேர வீட்டுக்கு கம்ப்ளைன்ட் போகும்.. so ஒரு விளையும் பயிர் இப்படியாக முளையிலேயே கிள்ளப்பட்டது, ஆதலினால் தமிழ் படிக்கும் நல்லுலகே - மாடியிலிருந்தே ரோட்ல விளையாடுற கிரிக்கெட் பார்த்து மனசத்தேதிக்க வேண்டியதபோச்சு.. Champions League ல தோத்தோம், World cup ல ஜெயக்கலன்னு எல்லாம் இப்போ சொல்லி ப்ரயோஜனமே கடயாது, இதெல்லாம் 15 வர்ஷங்களுக்கு முன்னாலேயே எழுதப்பட்டது..

b ) மொட்டை மாடியும் underarms கிரிக்கெட்டும் - நிஜ கிரிக்கெட் எ எட்டி நின்னு வேடிக்கை பாத்து பாத்து கேம் எ improvise பண்ணலன்ன நாம பிரச்சனையில்லாம விளையாடற ஒரே கிரிக்கெட், book கிரிக்கெட்மட்டும் than என்கிற ஒரு ஆழ்த்த சுய அனுதபதிலே கண்டுபிடிக்கப்பட்டது தான் இந்த மொட்டை மாடி underarms கிரிக்கெட். இதோட ரூல்ஸ் ஏ தனி.. One பிட்ச் out first rule, only offside runs , only 2 fielders per team, வெரி இம்போர்டன்ட் நோ ரன்னிங் ரன்ஸ், என்னா மாடி வீட்டு ஆன்டி ஓடற சத்தம் கேட்டா யாரு மாடில ஓடறது னு வந்துடுவாங்க, மத்த ரூல்ஸ் எல்லாம் கொஞ்சம் கேப் ஆனதுநாளே மறந்து போச்சு.. But all that is relevant is here . இதுல மிகப்பெரிய மேட்டர் என்னன்னா ball எ கீழ அடிச்சா batsman than போய் கரும சிரத்தையா எடுத்துட்டு வரணும். மத்த மாலுமிகள் ரோட்ல போற எந்த நல்ல மனுசனும் அந்த ball எ எடுக்காம லைட் ஹவுஸ் வேலை செய்வாங்க.. இதுல நல்ல விஷயங்களையும் நாம சொல்லியாகனும். Earlier generation மொட்டை மாடி கிரிக்கேடேர்ஸ் ரோட்ல நடந்து போனா அந்த ball எ நம்ம மாடிக்கு throw பண்ணுவாங்க, அவங்களோட throwing arm ஓட power பொறுத்து மொட்டை மாடிக்கு வராமல் அது 1st floor , 2nd floor ஆன்டி வீட்டுல பொய் விழாம இருக்கணும், On the other hand ரொம்ப தாண்டிப்போய் பின் வீட்டு லையும் போய் விழாம இருக்கணும், இதெல்லாம் consider பண்ணாம ஆர்வக்கோளாருல எதாவது veteran cricketer ball எ எங்கயாவது தூக்கி அடிச்சிட்டர்னா நமக்குத்தான் கஷ்டம்.. So தன் கையே தனக்கு உதவின்னு ball அடிச்சா உடனே கீழே ஓடிப்போகவேண்டியது தான், இதுல வெந்தபுண் ல வேல் என்னன்னா ball through வா போச்சுன்னா அவுட் வேற.. சச்சின்களும் தோணிகளும் தமிழகத்தில் உருவாகாமல் போனதுக்கு இதுதான் man reason ..

Next day morning மேட்ச் எ வெச்சு night 1 மணி வரை எழுதுவது, அதனால் typos இருந்தால் தயவு செய்து மன்னித்தருளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

A gate way to my மொட்டை மாடி - தொடரும்..

1 comment:

மோகன் குமார் said...

உங்களுக்கு நல்ல ஹியூமர் சென்ஸ்; வரிக்கு வரி அது தெரிகிறது. எனது சின்ன வயது கிரிக்கட் நினைவுகளை கிளறி விட்டுடீங்க, நன்றி; அவ்வபோதாவது எழுதுங்க