தலைவா, முதன் முதலில் தமிழ் ரசிகர்களை தன தொண்டனாக்கிய முதல் அரசியல் அல்லாத தலைவன் நீயாகத்தான் இருக்க வேண்டும்.
நீ படங்களில் காக்கி சட்டையில் கோபமாக உறுமிய உறுமல்களைக்கண்டு நான் எனது 7 வயதில் வளர்ந்து உன்னைபோலவே போலீஸ் காரனாக மாறி கேடிப்பயல்களை பந்தாடி தண்டித்து திருத்த வேண்டும் என்று சபதமிட்டிருந்தேன். பாழாய்ப்போன சமூகமும் ரொம்ப பலசாலியான கேடிகளும் என் கனவை நினைவாக்க விடவில்ல. எனது நிறைவேறாத ஆசைக்குப் பழி வாங்கவோ என்னவோ தான் நீ இன்னும் பல அவதாரங்கள் எடுத்து பல பரிமாணங்களில் எதிரிகளைப்பறந்து பறந்து சுத்தி சுத்தி அடித்துக்கொண்டிருக்கிறாயோ என்னவோ..
Actualla இப்போ, அதாவது ஒரு 15வருஷங்களாக நான் உன் நடிப்புக்கு ரசிகனே இல்லை. கட்சி மாறிவிட்டேன என்று நீ கேட்கலாம். .
காதலின் தீபோமொன்று ஏற்றினாளே என்நெஞ்சில் என்று பாடிய உன் கம்பீரமும் அந்த long hair style உம, தீ படத்தில் உனது நடிப்பும், தில்லு முல்லுவில் நீ அடித்த காமெடி உம ஏனோ பின் வரும் மனிதன், ராஜாதி ராஜா, போன்ற படங்களில் காண முடிய வில்லை. அதன் பின்னர் நீ சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டாய். ஏதோ நாயர் புடித்த புலி வால் போல தெரிந்தோ தெரியாமலோ நீயாகவோ அல்லது ரசிகர்களாகத் தோற்றுவித்த ஒரு மாயக்கண்ணாடியில் சிக்கிய சிங்கிள் சிங்கமாய் பல படங்கள் செய்தாய். தளபதி முதல் பாட்ஷாவிலிருந்து சிவாஜி வரை. ஏந்திரன் ஒரு வேறு equation அதனால் அதை இங்கே சேர்க்கவில்லை நான். producer களுக்கும் திரையரங்க முதலாளிகளுக்கும் உனக்கும் தான் பல கோடிகள் சேர்ந்தன. என்னதான் அதன் பின்னரும் நீ பேடிப்பயல்களை அடித்து உதைத்து நல்வழிப்படுத்திக்கொண்டிருந்தாலும் அந்த எண்பதுகளின் கோபக்கார இளைஞகனை அந்த சூப்பர் ஸ்டார் இமேஜ் குள் என்னால் தேடிக்கண்டுபிடிக்க முடியவில்லை.
கடைசி 15 வருடங்களாக நன் உனது நடிப்பின் ரசிகன் இல்லையே ஒழியே தனி மனித வாழ்கையில் இதே காலகட்டத்தில் தான் சூப்பர் ஸ்டார் ஆக ஆரம்பிதிருந்தாய். அது ஆன்மீக ஈடுபாடாக இருக்கட்டும், அரசியல் நடு நிலைமையாக இருக்கட்டும், ஏழைகளுக்கு உதவி செய்தலாக இருக்கட்டும், உன்னால் நஷ்டப்பட்ட திரைத்துரையினர்களுக்கு நஷ்டஈடு குடுத்ததாக இருக்கட்டும், பர்சனல் இமேஜ் கூடிக்கொண்டே வந்த அதே பொழுதில் உன் படங்கள் எல்லாம் stereo type ஆகா ஆகிக்கொண்டுவந்தன.
இதைப்புரிந்து அறிந்துகொண்டதலோ என்னவோ தான் ரசிகர்களுக்காக இல்லாமல் உனது திருப்திக்காக பாபா போன்ற படங்களில் நடித்தாய். But it was too deep and too
late for you to get out of your image trap.
உனது மகள்களின் வயதொத்த நடிகைகளுடன் டூயட் பாட ஆரம்பித்தாய். ஏனோ மனது ஒப்பவே இல்லை. இதை முதலில் நீ ஆரம்பிக்க வில்லை தான், உனக்கு முன்னரே பல ஸ்டார் ஹீரோக்கள் செய்தது தான், இருந்தாலும் நீ கட்டிய அந்த பர்சனல் இமேஜ் கு அது ஒப்பவில்லை. கருப்புதொலுக்கே ஒரு brand ambassador ஆக இருந்த நீ சிவாஜியில் வெள்ளைத் தோலுடன் உலா வந்தாய். இருந்தாலும் கோடிகள் கொட்டின, cut out க்கு பாலபிஷேகங்கள் தொடர்ந்தன, அரசியல் கட்சிகள் உன்னை தான் பிரசார பீரங்கியக்க விரும்பின.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க வெள்ளித்திரையிலும் வெளி விழாக்களிலும் கம்பிரமாகப்பார்த்த உன்னை நோயளியாகப்பார்க்க ரசிக நெஞ்சங்கள் ஒரு போதும் ஒப்பாது. அதனால் உன்னைக்கொண்ட நோயை உதறித்தள்ளி பழைய ரஜினியாக நீ வர எங்களது பிரார்த்தனைகள். நீ திரும்பி வந்து குழந்தைகளுடன் டூயட் பாடுவதைப் பார்க்க இல்லை, rana படத்தை முடித்துக்கொடுக்க இல்லை, அனால் White and White குர்தா பைஜாமாவில் திரையுலகின் வழிகாட்டியாக, ஒரு பெரியண்ணனாக இருந்து கொண்டு உன் பர்சனல் இமேஜ் ஐ வளர்த்து கொண்டே போய் ரசிகர்களின் மனதாகிய இமயமலையில் ஒரு அறிய இடத்தை நிரப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் .