கோபென்ஹகேன் ஐப்பற்றி எழுத வேண்டிய அவசியமும் அவசரமும் என்ன என்று நீங்கள் நினைக்கலாம். Our memory is very short lived. Today s news paper is tomorrows waste paper. இது newspaper க்கு மட்டும் அல்ல நியூஸ் கும் பொருந்தும். அடுத்த நியூஸ் வரும் வரை தான் இந்த நியூஸ் க்கு மவுசு. சமையல் எண்ணை விளம்பரத்தில் வரும் தாத்தா சொல்வது மாதிரி இப்போ கோபென்ஹகேன் பத்தி எழுத வில்லை என்றால் எப்போ எழுதுவது?
எங்கோ பார்த்தது போல், Anagram of the week - Copenhagen - Change .. Nope! இதன் விளக்கம் பின் வரும் பத்திகளில். இன்று இருக்கும் ஒரு super power status உலகில், அண்ணே அமெரிக்க அண்ணே நீங்க வுடற பொகைய கொஞ்சம் குறைசுக்கோங்க, சீனாகார நண்பரே.. நீங்க ரொம்ப ஓவரா தான் பொக வுடறீங்க கொஞ்ச வருஷங்களா, அட நீங்க குறைச்சே ஆக வேண்டும். ஆஸ்திரேலியா அண்ணாச்சி.. நீங்களும் தான்.. அப்படி சொன்னால் ஒலகமே கை கொட்டி சிரிக்கும்.. அடேய்.. நீங்க இத செய்யலை னா நாளைக்கு கை கொட்டி சிரிக்க நீங்களும், உங்களை பார்த்து ரசிக்க நாங்களும் இருக்க மாட்டோம் என்று என்ன தான் நீங்கள் கரடியாக இல்லை மனிதனாகவோ கத்தினாலும் அவர்களுக்கு கேக்காது, புரியாது.. சரி, இது பெரிய்யவங்க சமாசாரம், உலகத்தலைவர்கள் பார்த்துபாங்க என்று விட முடியுமா, I think we have all crossed the time to leave the responsibility to our leaders ..
குளோபல் வார்மிங்கால் 2050 ல் வெப்ப நிலை 2 -5 டிகிரி செல்சியஸ் உயரும் என்றும் அதனால் ஐஸ் கட்டிகள் உருகி பயமுறுத்தும் ஹாலிவுட் படங்களில் காண்பிப்பது போல், புறநானூற்றில் சொல்வது போல், ஊழிக்காலம் வந்து இப்பூவுலகே நீரின் அடியில் மறையும் அபாயம் உள்ளது. இது ஒன்றும் மிதிகல் சமாச்சாரமோ science fiction ஒ அல்ல. கடலுள் மாய்ந்த பூம்புகார், தனுஷ்கோடி போன்றவை நாம் குளோபல் வார்மிங் phenomenon பற்றி நாம் தெரிந்து உணர்ந்து கொள்வதற்கு முன்னரே அழிந்து போன இடங்கள். இவை குளோபல் வார்மிங் ஆல் மூழ்கினவை இல்லை வேறு சில காரணங்களாலா என்பது ஆராய்ச்சி செய்யப்பட வேண்டிய விஷயம். இவை போல இன்ன பிற நாடுகளிலும் கடலில் மூழ்கிப்போன நகரங்கள் உண்டு.
Impact உடனே தெரியும் Drink and drive மாதிரியோ அல்லது புகைப்பிடித்தலும் புற்று நோயும் போல cause effect relationship அவ்வளவு தெளிவாக தெரியாதது இந்த குளோபல் வார்மிங் விஷயத்தின் plus அண்ட் minus point. ஒரு வேளை கைல காசு வாய்ல தோசை னு இன்னிக்கு புகை விட்டா நாளைக்கு கடல் நீர் அதிகமானால் அனைவரும் ஒன்று திரண்டு எதாவது செய்திருப்போம், இது slow poison வடிவில் நின்று கொல்வதால் ஒவ்வொருவரும் இந்த மாற்றத்திற்கு நான் விட்டா புகை கரணம் இல்லை.. இது அவன் விட்ட புகையினால் வந்த மாறுதல் என்று மாறி மாறி கை காண் பித்துக்கொண்டிருக்கிறோம். அமெரிக்கா காரனும் ஐரோப்பா காரனும் விட்ட புகை ஏனோ பாவம் ஏதுமறியாத அன்டர்டிக்காவைப்போய பதம் பார்த்து விட்டு வருகிறது.. அங்கே தான் ozone layer maximum பழுதடைந்ததாக சொல்கிறார்கள். இதே இந்த விளைவு அந்த, அந்த நாடுகளில் வந்தால் மக்களுக்கு ஒரு பயம் இருக்கும், மாற்றத்தைக்கொண்டு வருவது ஒரு அளவிற்கு easy.இவை தான் தன்னலத்திற்காக பொதுசொத்தை நாசப்படுத்தும் "tragedy of the commons".
ஏன் கோபென்ஹகேன் ல் மாற்றம் ஏதும் நிகழாது என்றால் புகை விடும் ஓட்டப்போட்டியில் முதலில் சேர்ந்த அமெரிக்கா, ஐரொப்பா போன்ற நாடுகள் இப்போது தான் recession ஐ விட்டு எழுந்து வருவதாக தத்தம் மக்களுக்கு வாக்குறுதி கொடுத்துள்ளனர், அப்போது தான் அங்கே நாற்காலிகள் பிழைக்கும், aggregate demand, industrial output இவையெல்லாம் உயரும். குளோபல் வார்மிங்ன் impact, எங்கோ science fiction படங்களில் வருவது போல வருவதால் மக்களுக்கும் even தலைவர்களுக்கும் புரிந்தாலும் ஏனோ கையால் சூரியனை மறைத்துக்கொண்டு இருண்டுவிட்டது என்று சொல்லவேண்டிய கட்டாயம் ஆகிவிட்டது.. இந்தியா போன்று லேட் அக complan குடித்து விட்டு வளரும் நாடுகளோ வளர்ந்த நாடுகளைப்பார்த்து 200 -300 ஆண்டுகளாக புகை கக்கி சூப்பர் பவர் ஆக சுற்றி வந்த நீங்கள் எங்கள் வளர்ச்சியை (புகை = வளர்ச்சி) குறைத்துக்கொள்ள சொல்வது அநியாயம். Recession மற்றும் national demand க்காக நாங்களும் புகை விடும் industrial output ஐ குறைத்துக்கொள்ள முடியாது. முதலில் maximum புகை விடும் அமெரிக்க வும் சீனாவும் முன் வரட்டும் என்று சொல்கின்றன.. இந்த நிலைமையிலும் புகை விடாத டெக்னாலஜி ஐ free ware போல ஷேர் செய்ய வளர்ந்த நாடுகள் காட்டும் தயக்கம் தன்னலத்தின் உச்சகட்டம். Everyone is passing the buck. So கோபென்ஹகேன் பல நாட்டுத் தலைவர்களும் 10 -15 நாட்கள் கூடிப்பேசி என்ன கிழிச்சீங்க என்று யாரும் கேட்டுவிடக்கூடாது என்ற காரணத் திர்க்காகவே எல்லாத் தலைவர்களுக்கும் பொருந்தும் விதமாக பல் புடுங்கிய ஒரு version of draft ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள் என்று விஷயம் தெரிந்தோர் பேசிக்கொள்கிறார்கள். இதனால் தான் copenhagen - Change - Nope என்று ஆகிவிட்டது.
பல மாற்றங்களை people to people முறையில் மட்டுமே செயல் படுத்த முடியும். Government களால் முடியாத பல மாற்றங்களை civil society கள் சாதித்திருக்கின்றன. உலகெங்கிலும் ஒரு கையெழுத்து போராட்ட்டம் போல மக்கள் பலரையும் ஈடு படுத்தி விழிப்புனணர்வு ஏற்படுத்துவது கையால் ஆகாத பல உலகத்தலைவர்களை ஓரமாக தள்ளிவிட்டு நாம் முன்னேர்வதற்கான ஒரே வழி.
மக்கள் ஏற்படுத்தவேண்டிய மாற்றங்கள் யாவை.. இந்தியா போன்ற வளரும் நாடுகள் emission அதிகமுள்ள filament பல்பு பயன்படுத்தாமல் CFL லைட் பயன்படுத்தலாம் (பல நாடுகளில் பல்புகள் ban செய்யப்பட்டுள்ளன), அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள மக்கள் cheese burger சாப்பிடுவதை குறைப்பது கூட குளோபல் வார்மிங் ஐ கட்டுபடுத்த உதவும். மாட்டு தீவனத்தில் மற்றம் செய்தல் முதல் airconditioner, car போன்றவற்றை குறைவாக உபயோகிப்பது, மரம் நடுவது, மாமிசம் உண்ணாமல் இருப்பது, பேன் லைட் உபயோகப்படாத போது சுவிட்ச் ஆப் செய்வது வரை common man செய்யக்கூடிய பல விஷயங்கள் உள்ளன. மேலும் பல தகவல்களை நம் நண்பர் google அவர்கள் மறைக்காமல் வைத்துள்ளார், how to reduce global warming என்று keyboard ஐ தட்டுங்கள் திறக்கப்படும் பல உண்மைகள். இதில் நீங்கள் note செய்யவேண்டிய ஒன்று உள்ளது. இங்கே குறிப்பிட்டுள்ள பல விஷயங்கள் நம் பெற்றோர்களும் அவர்கள் பெற்றோர்களும் சொல்லிக்கொண்டு வந்தவை தான், technology related விஷயங்கள் தான் இவற்றில் புதியவை. இவற்றில் பல நாம் பள்ளிக்கூட பாடங்களாகப் படித்தவை தான். நாம் தான் இவற்றை எல்லாம் தாண்டி நாம் வளர்ந்து விட்டோம் என்று தவறாக நினைத்துவிட்டோம்.
Friday, December 18, 2009
மழையும் நகரமும்
ஏனோ நம்ம சிட்டி மக்களுக்கு மழைனா ஒரு allergy , இருக்காதா பின்னே, ரோடின் ரெண்டு ஓரத்திலையும் தண்ணி, பாத சாரிகள் வண்டி ஓட்டுவோர் அனைவரும் அந்த median இல்லாதா ரோடின் நடுவே எறும்பு ஊர்வது போல ஒருவர் பின் ஒருவராக, மாட்டு வண்டியும் மாருதி காரும் ஒரே வேகத்தில் போக வைக்கும் .. மழை, The universal Leveller .
மக்களை சொல்லி குற்றம் இல்லை, ஏனோ நம் தெருக்கள் மழையே பெய்யாது என்ற ஒரு நம்பிக்கையில் கட்டப்பட்டவை போல, பெருவாரியான தெருக்களில் மழை நீர் தேங்கியே நிற்கும், மழை நீர் ஆட்டோமாடிக் ஆக சாக்கடையில் தான் பொய் சேர வேண்டும் என்பது அந்த மழை நீரின் விதி போலவும் தேங்கி நின்று போவோர் வருவோரின் டிரெஸ்ஸை வீணாக்குவது என்பது வானத்திலிருந்து கீழே விழுந்து மாண்டு போய் சாந்தி அடையாத அம்மழை நீரின் ஆவி (இது தான் நீராவியோ? ) பழி வாங்குவது போல தோன்றும்.. போகும், வரும் வாகனங்கள் டயர் வழியாக வண்டிகள் போகும் இடத்துக்கு மழை நீரை distribute செய்தே ஓரிடத்தில் இருக்கும் மழை நீரை போக்க வேண்டும. Here too மழை plays a big leveller
ஜோசியத்தில் நம்பிக்கை இல்லாதவர் கூட தட்ப வெட்ப நிலை கேட்பார், எனக்கு ஏனோ இது புரியாத புதிர், கூகிள் சர்ச், rippleys believe it or not மாதிரி எதாவது ஒன்றில் அப்படியே weather report உண்மையாக பலித்திருக்கிறதா என்று தேடிதான் பார்க்க வேண்டும். பாவம் பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகங்கள், ரொம்ப சமுதாய அக்கறையோடு ஸ்கூல் லீவு விடுவார். அன்று ஏனோ வருண பகவன் teka குடுத்து விட்டு நக்கலாக சிரிப்பார் இவர்களை பார்த்து .. பள்ளி குழந்தைகள் எதோ அவரவர் வசதிக்கு கில்லி, கோலி, பேப்பர் கப்பல், கிரிக்கெட், வீடியோ கேம்ஸ், creche என்று பல வேலைகளில் பிஸி ஆகி விடுவர். பசங்க ஸ்கூல் லீவ் என்று திரும்பி வீட்டுக்கு வந்து என்ன செய்கிறார்கள் என்று ஆபீஸ் ல் இருக்கும் parents மண்டை உடைத்து கொண்டிருப்பார்..
விக்ரமே பாடிவிட்டார், திருநெல்வேலி அல்வா டா.. சென்னையிலே என்னடா தண்ணி பஞ்சம் கூட இல்ல டா னு.. ஒரு ஐந்து வருஷங்களாக rain water harvesting கோயில் குளம் தூர் வாரல் போன்ற நடவடிக்கைகளால் சிட்டி யில் வாட்டர் டேபிள் கொஞ்சம் உயர்ந்து தண்ணீர் பஞ்சம் இல்லாவிட்டாலும் நம் மக்கள் அந்த மெட்ரோ வாட்டர் லாரி பின்னல் நீண்ட queue வை மறந்திருக்க மாட்டார்கள், ஆனாலும் ஏனோ மழை வந்தால் ஒரு எரிச்சல், கிரிக்கெட் ல் இந்திய வெற்றி பெற்றுக்கொண்டே இருந்தால் இருக்கும் ஒரு பீலிங்.. சே என்ன டா இவுங்க ஜெயச்சுகிட்டே இருக்காங்க,, அந்த மாதிரி மழை பெயஞ்சுட்டே இருக்கு என்ற ஒரு சந்தோஷம் கலந்த ஒரு அலுப்பு..
பசங்க ஸ்கூல் லீவு விடறது வேற matter நமக்கே ஆபீஸ் லீவ் விடுவாங்களா ? எதாவது நியூஸ் சேனல் ல இன்று சென்னையில் அனைத்து கம்பெனி களும் மழை காரணமாக மூடியே இருக்கும் என்று ஒரு G Oனு ஒரு நியூஸ் தேனாக காதில் வந்து பாய எவ்வளவு பேர் வெயிட் பண்ணியிருக்கீங்க, மாத்தி மாத்தி டிவி சேனலையும் ஜன்னல் வெளியே மழையும் பார்க்கும் அந்த காத்திருத்தல் சுகம், அடா அடா.. கடைசியில் இந்த பகல் கனவெல்லாம் பலிக்காது, பேசாம மழை நின்ற gap ல ஆபீஸ் கிளம்பறது தான் பெட்டெர் என்று ஒரு ஞான உதயம் வந்து, வண்டியை ஓங்கி ஒரு உதை விட்டு கிளம்பும் அந்த காலை வேளை.. எதோ லவர் காக காத்திருந்ததை பத்தி எல்லாம் ரொம்ப பேரு நிறைய ரௌசு விடுவாங்க,, இதை பார்க்கும்போது அதெல்லாம் ju ju pi
மழை வந்தால் ஒரே குடையில் ஜோடியாக போகலாம் என்கிற ஒரு hidden agenda நிறைவேறும் வாய்ப்பு வரும், உடனே உங்களுக்கு மரீனாவில் மதியம் ஒரு மணி வெய்யிலில் குடையில் இருக்கும் ஜோடி ஞாபகம் வந்தால் நான் பொறுப்பல்ல.. என்ன இருந்தாலும் மழையில் ஒரு குடையின் கீழ் இருக்கும் ஜோடி.. அந்தி மழைபொழிகிறது .. பாட்டெல்லாம் பாடிக்கொண்டே போகலாம், இதெல்லாம் பாவம் நம் மரினா பீச் வெய்யில் ஜோடிகளுக்கு சாத்தியம் இல்லை, நண்பர்கள் யாரேனும் வெய்யில் குடை டூயட் சாங் இருந்தால் தயவு செய்து தெரியபடுத்தவும், அது காதலோ என்ன கண்றாவியோ எதுவா இருந்தாலும் வாழ வைக்கலாம்..
மழை துளிகள் தொடரும்..

Subscribe to:
Posts (Atom)